/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நா.த.க., நிர்வாகி விலகுவதாக அறிவிப்பு
/
நா.த.க., நிர்வாகி விலகுவதாக அறிவிப்பு
ADDED : மார் 16, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நா.த.க., நிர்வாகி விலகுவதாக அறிவிப்பு
நாமக்கல்:நா.த.க., நாமக்கல் மண்டல செயலாளராக இருந்து வருபவர் பாஸ்கர். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பல்வேறு விமர்சனங்களை வைத்துள்ள அவர், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில், 'இனி உங்களுடன் பயணிப்பது, தாய் தமிழையும், தமிழர் நல் திருநாட்டையும் மயானத்தில் புதைக்கும் தமிழின துரோகம்' என, குற்றம் சாட்டி உள்ளார்.
அவரது குற்றச்சாட்டும், கட்சியில் இருந்து விலகியதும் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.