/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'செக்' மோசடி வழக்குஒருவருக்கு 'காப்பு'
/
'செக்' மோசடி வழக்குஒருவருக்கு 'காப்பு'
ADDED : மார் 19, 2025 01:06 AM
'செக்' மோசடி வழக்குஒருவருக்கு 'காப்பு'
எலச்சிபாளையம்:எலச்சிபாளையம் அருகே, உஞ்சனையை சேர்ந்த மாதேஸ்வரன் மகன் நரேந்தர்; இவரிடம், கொன்னையார் கிராமம், அனைப்பாளையம் பகுதியை சேர்ந்த வீரன் மகன் முருகன், 45, என்பவர், 3.50 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். நீண்ட நாட்களாகியும் பணத்தை திரும்ப தராததால், முருகன் அளித்த, 'செக்'கை ஆதாரமாக வைத்து, திருச்செங்கோடு விரைவு நீதிமன்றத்தில், நரேந்தர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் முருகன் ஆஜராகாததால், கடந்த, 2020 மார்ச், 30ல் , நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. அதற்கும் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று, தலைமறைவாக இருந்த முருகனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதில், ஓராண்டு சிறை, ஏழு லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில், தண்டனைக்காலம் மேலும், ஒரு மாதம் நீட்டிக்கப்படும் என, நீதிமன்றம் தீர்ப்பளித்தது.