தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ முடிவுற்ற டோல்கேட்டுகளைஅகற்ற நடவடிக்கை தேவை

முடிவுற்ற டோல்கேட்டுகளைஅகற்ற நடவடிக்கை தேவை

முடிவுற்ற டோல்கேட்டுகளைஅகற்ற நடவடிக்கை தேவை


ADDED : மார் 21, 2025 01:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2025 01:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

முடிவுற்ற டோல்கேட்டுகளைஅகற்ற நடவடிக்கை தேவை

ராசிபுரம்:ராசிபுரம் அடுத்த ஆண்டகளுர்கேட்டில், அகில இந்திய மோட்டார் வாகன கட்சி சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

கோவை, சென்னை, வேலுார், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 50க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர். மாநில பொதுச் செயலாளர் ராஜா பேசியதாவது:

சொந்த வாகனங்களை வைத்து, கள்ளத்தனமாக வாடகைக்கு இயக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 30 ஆண்டுகளுக்கு மேலாக மேக்சி கேப் வாகனங்களுக்கு, 12+1 இருக்கைகள் மட்டுமே அனுமதி உள்ளது. மக்கள் தொகை அதிகரித்துள்ள நிலையில், அதனை கருத்தில் கொண்டு இருக்கைகளின் அளவை அதிகரிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் முடிவு பெற்ற டோல்கேட்கள் அகற்றப்படாமல் உள்ளது. மத்திய,மாநில அரசுகள் அதனை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை, போக்குவரத்து துறை மூலமாக ஆன்லைன் அபராதமாக, 10,000 ரூபாய் கூட விதிக்கின்றனர். இதனால் பெரிய அளவில் இழப்பீடு ஏற்படுகிறது. இவற்றை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு பேசினார். மாநில பொருளாளர் யுவராஜா, முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us