/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
ADDED : மார் 25, 2025 12:59 AM
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
வெண்ணந்துார்:வெண்ணந்துார், பல்லவநாயக்கன்பட்டி பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து, மாரியம்மன் கோவில் அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. பல்லவநாயக்கன்பட்டி பஞ்சாயத்து மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு, ஏற்கனவே, மூன்று முதல், ஐந்து நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது, ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.
இந்நிலையில், நேற்று மதியம், பி.மேட்டூர் ஒன்றிய துவக்கப்பள்ளி அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. எனவே, ஊராட்சி நிர்வாகம் சேதமான குடிநீர் குழாயை உடனடியாக சீரமைத்து, குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.