/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கட்டட பொறியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
கட்டட பொறியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 26, 2025 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கட்டட பொறியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
கரூர்:கரூர் மாவட்ட கட்டட பொறியாளர்கள் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் ரவிக்குமார் (பொ) தலைமையில், வட்டார போக்குவரத்து அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லிக்கற்கள் உள்ளிட்ட, கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும், கட்டட பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த, ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் தேவன்ராஜ், பொருளாளர் பாஸ்கரன் உள்பட, 50க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் பங்கேற்றனர்.