ADDED : மார் 27, 2025 01:57 AM
அரசு பஸ்சில் 'கியூஆர் கோடு'
திருப்பூர்:பயணிகள் நடத்துனரிடம் டிக்கெட் பெற்று சில்லரை பெறுவதில் சிரமங்கள் இருப்பதாலும், பெரும்பாலான இடங்களில் 'கியூஆர் கோடு' மூலம் ஆன்லைன் பரிவர்த்தனையில் பணம் அனுப்பி, பயணியர் பழகி விட்டதாலும், அரசு போக்குவரத்து கழகம் டவுன், சர்வீஸ் பஸ்களிலும் 'கியூஆர் கோடு' மூலம் டிக்கெட் வழங்கும் நடைமுறையை கொண்டு வந்துள்ளது. கோவை கோட்டத்துக்கு உட்பட்ட, திருப்பூர் மண்டலத்தில் முதல் கட்டமாக உடுமலை, கோவை மார்க்கமாக பஸ்களில் 'கியூஆர் கோடு' மூலம் டிக்கெட் பெறும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் பஸ் நடத்துனர்களிடம் உள்ள 'கியூஆர்' கோடுகளில் ஸ்கேன் செய்து, டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். திருப்பூர் மண்டலத்தில் இயக்கப்படும் அனைத்து பஸ்களிலும் படிப்படியாக இந்த வசதி விரிவுபடுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.