/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோவில் திருவிழாக்களால்குண்டுமல்லி விலை உயர்வு
/
கோவில் திருவிழாக்களால்குண்டுமல்லி விலை உயர்வு
ADDED : மார் 30, 2025 01:27 AM
கோவில் திருவிழாக்களால்குண்டுமல்லி விலை உயர்வு
எருமப்பட்டி:எருமப்பட்டி யூனியன், பொட்டிரெட்டிப்பட்டி, நவலடிப்பட்டி, கஸ்துாரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் குண்டுமல்லி பயிரிட்டுள்ளனர். இங்கு விளையும் பூக்களை, தினமும் கூலியாட்கள் வைத்து பறித்து, நாமக்கல், கரூர், ஈரோடு பகுதிகளில் நடக்கும் தினசரி பூ சந்தைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.
கடந்த மாதம் வரை, கடும் பனிப்பொழிவால் குண்டுமல்லி வரத்து குறைந்திருந்தது. தற்போது, கோடைவெயில் கொளுத்தி வருவதால், குண்டுமல்லி வரத்து நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் குண்டுமல்லி கிலோ, 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், நாமக்கல்லை சுற்றியுள்ள கிராமங்களில் கோவில் திருவிழாக்கள் துவங்கியுள்ளதால் பூக்கள் தேவை அதிகரித்துள்ளது. இதனால், குண்டுமல்லி விலை அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம், குண்டுமல்லி கிலோ, 400 ரூபாய்க்கு விற்ற நிலையில், நேற்று, 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.