/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உண்டியல் காணிக்கைதிருடிய வாலிபர் கைது
/
உண்டியல் காணிக்கைதிருடிய வாலிபர் கைது
ADDED : ஏப் 02, 2025 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உண்டியல் காணிக்கைதிருடிய வாலிபர் கைது
வெண்ணந்துார்,:வெண்ணந்துார் அடுத்த, சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில், அத்தனுார் அம்மன் கோவில் பஸ் ஸ்டாப் அருகே விநாயகர் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலுக்குள், கடந்த மார்ச், 4-ல் புகுந்த வாலிபர் ஒருவர், உண்டியலை உடைத்து காணிக்கைகளை திருடி சென்றார். இதுகுறித்து புகார்படி வெண்ணந்துார் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அதில், சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையம் அடுத்த புதிய சுண்ணாம்பு சூளை பகுதியை சேர்ந்த முருகன் மகன் பரத்ராஜ், 19, உண்டியல் காணிக்கையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.