/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெயிலால் வறண்டமல்லசமுத்திரம் சின்ன ஏரி
/
வெயிலால் வறண்டமல்லசமுத்திரம் சின்ன ஏரி
ADDED : ஏப் 03, 2025 01:33 AM
வெயிலால் வறண்டமல்லசமுத்திரம் சின்ன ஏரி
மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரத்தில் அமைந்துள்ள சின்ன ஏரி, பெரிய ஏரிக்கு, மாமுண்டி திருமணிமுத்தாற்றில் இருந்து வாய்க்கால் வழியாக தண்ணீர் வருகிறது. மல்லசமுத்திரம் சுற்றுவட்டார பகுதி களில் இருக்கும் குளம், குட்டைகள், கிணறுகள், போர்வெல்கள் ஆகியவற்றிற்கு ஊற்றுநீர் மூலம் முக்கிய நீராதாரமாக விளங்கி வருகிறது. பல நுாறு ஏக்கர் விவசாய நிலங்கள் இந்த தண்ணீரையே நம்பியே உள்ளன. மேலும், 15,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் மல்லசமுத்திரம் பகுதிக்கு, முக்கிய நீராதாரமாக விளங்கி வருகிறது. தற்போது, வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால், சின்ன ஏரி வறண்டு காணப்படுகிறது. இதனால், பொதுமக்களும், விவசாயிகளும் பாதிப்படைந்துள்ளனர். கோடை மழையை எதிர்பார்த்து காத்துள்ளனர்.