/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'எஸ்' வளைவு சாலையில்வேகத்தடை அமைக்கப்படுமா
/
'எஸ்' வளைவு சாலையில்வேகத்தடை அமைக்கப்படுமா
ADDED : ஏப் 03, 2025 01:33 AM
'எஸ்' வளைவு சாலையில்வேகத்தடை அமைக்கப்படுமா
நாமக்கல்:நாமக்கல் - துறையூர் சாலை, என்.கொசவம்பட்டியில் இருந்து பொன்விழா நகர், ஆண்டவர் நகர் வழியாக திருச்சி சாலைக்கு செல்லும் இணைப்பு சாலை அமைந்துள்ளது. வகுரம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் இருந்த பெரும்பாலான பகுதி, தற்போது மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் வந்துள்ளன. அதில், கொசவம்பட்டி நான்கு சாலை பிரிவு, அன்னை சத்தியா நகர், ஆண்டவர் நகர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
இப்பகுதியில் உள்ள சாலை, 'எஸ்' வளைவில் உள்ளதால், அசுர வேகத்தில் வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும். அங்குள்ள மாநகராட்சி திடக்கழிவு மேலாண் உரப்பூங்கா, பொம்மக்கால் கோவில், கற்பக விநாயகர் கோவில் அருகே பெயரளவுக்கு வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. கொசவம்பட்டிக்கு செல்லும் சாலையில் வேகத்தடை இல்லை.
எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி, இந்த சாலைகளில் வேகத்தடை அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை வித்துள்ளனர்.

