தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ சுப்ரமணிய சுவாமி கோவிலில்தேர்த்திருவிழா கொடியேற்றம்

சுப்ரமணிய சுவாமி கோவிலில்தேர்த்திருவிழா கொடியேற்றம்

சுப்ரமணிய சுவாமி கோவிலில்தேர்த்திருவிழா கொடியேற்றம்


ADDED : ஏப் 08, 2025 02:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2025 02:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சுப்ரமணிய சுவாமி கோவிலில்தேர்த்திருவிழா கொடியேற்றம்

மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை மலைக்குன்றின் மீது பழமைவாய்ந்த சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, தேர்த்திருவிழா வெகுவிமர்சையாக நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று காலை, 5:00 மணிக்கு, மலை மீது கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது. உற்சவ மூர்த்தியான முருகன், வள்ளி, தெய்வானையுடன், அடிவார மண்டபத்தில் எழுந்தருளினார். இரவு, 7:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

வரும், 11 காலை, 9:00 மணிக்கு, விநாயகர் தேரோட்டம்; மாலை, 4:30 மணிக்கு, சுப்ரமணிய சுவாமி தேரோட்டம், மாலை, 6:00 மணிக்கு தேர் நிலை சேர்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 13 இரவு, 8:00 மணிக்கு, சத்தாபரண மகாமேரு; 14ல் மஞ்சள் நீராடுதலுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை, பரம்பரை அறங்காவலர் நந்தகுமார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us