/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொல்லிமலையில் திரண்டசுற்றுலா பயணிகள் குதுாகலம்
/
கொல்லிமலையில் திரண்டசுற்றுலா பயணிகள் குதுாகலம்
ADDED : ஏப் 15, 2025 02:00 AM
கொல்லிமலையில் திரண்டசுற்றுலா பயணிகள் குதுாகலம்
சேந்தமங்கலம்:நாமக்கல் மாவட்டத்தில், மூலிகைகள் நிறைந்த மலையாக கொல்லிமலை அமைந்துள்ளது. இங்கு, தொடர் விடுமுறை நாட்களில், தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
கடந்த, மூன்று நாட்களாக தொடர்ந்து விடுமுறை என்பதால், சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள், கொல்லிமலையில் திரண்டனர். இப்பகுதியில் சில நாட்களாக மழை பெய்ததால், அருவிகளில் தண்ணீர் கொட்டி வருகிறது.
இதனால், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்மருவிகளில் குளியலிட்டு மகிழ்ந்தனர். பின், அரப்பளீஸ்வர் கோவில், எட்டிக்கையம்மன் கோவில், மாசி பெரியசாமி கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர் விடுமுறை முடிந்ததால், நேற்று மாலை சுற்றுலா பயணிகள் சொந்த ஊருக்கு திரும்பினர். இதனால், கொண்டை ஊசி வளைவுகளில் ஏராளமான வாகனங்கள் அணி வகுத்து நின்றன.