/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அ.தி.மு.க., சார்பில்நீர்மோர் பந்தல் திறப்பு
/
அ.தி.மு.க., சார்பில்நீர்மோர் பந்தல் திறப்பு
ADDED : ஏப் 15, 2025 02:01 AM
அ.தி.மு.க., சார்பில்நீர்மோர் பந்தல் திறப்பு
திருச்செங்கோடு:கோடை காலத்தை முன்னிட்டு, திருச்செங்கோடு நகர அ.தி.மு.க., சார்பில், பொதுமக்கள் தாகம் தணிக்க, திருச்செங்கோடு மேற்கு ரத வீதியில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. நகர செயலாளர் அங்கமுத்து தலைமை வகித்தார்.
முன்னாள் அமைச்சர் தங்கமணி, ரிப்பன் வெட்டி நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார். நகர அவைத்தலைவர் பொன்னுசாமி, மாவட்ட துணை செயலாளர் முருகேசன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வக்கீல் சந்திரசேகர், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் பரணிதரன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை பொறுப்பாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பொதுமக்களுக்கு, நீர்மோருடன் தர்பூசணி, இளநீர் உள்ளிட்ட குளிர்ச்சி ஊட்டும் பழங்கள் வழங்கப்பட்டன.