ADDED : ஏப் 16, 2025 01:22 AM
டூவீலர்கள் மோதி ஒருவர் பலி
ப.வேலுார்:-நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே பிலிக்கல்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பிரவீன்குமார், 35; கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் ஆனங்கூர் பகுதியில் இருந்து, தன் வீட்டுக்கு டூவீலரில் சென்றுகொண்டிருந்தார். கொளக்காட்டுபுதுாரை சேர்ந்த தினேஷ் குமார், 30; இவரது மனைவி ஜீவிதா, 25; தம்பதியின் மகள் தீனா, 2; மூவரும், டூவீலரில் ஜேடர்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஆனங்கூர் அருகே, கழுவங்காடு பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, இரண்டு டூவீலர்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், நான்கு பேரும் பலத்த காயமடைந்தனர்.
அந்த வழியாக சென்றவர்கள், நான்கு பேரையும் மீட்டு, ப.வேலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பிரவீன் குமாரை, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரவீன் குமார் உயிரிழந்தார். ஜேடர்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

