/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வியாசராஜர் ஆஞ்சநேயருக்கு வெள்ளிக்கவசம் சாற்றுப்படி
/
வியாசராஜர் ஆஞ்சநேயருக்கு வெள்ளிக்கவசம் சாற்றுப்படி
வியாசராஜர் ஆஞ்சநேயருக்கு வெள்ளிக்கவசம் சாற்றுப்படி
வியாசராஜர் ஆஞ்சநேயருக்கு வெள்ளிக்கவசம் சாற்றுப்படி
ADDED : ஏப் 21, 2025 07:38 AM
நாமக்கல்: நாமக்கல் நரசிம்மர் சன்னதி தெருவில், ஸ்ரீவியாசராஜர் ஆஞ்சநேயர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு நரசிம்மர் கோவிலுக்கு சென்று, ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், வியாசராஜர் ஆஞ்சநேயரை தரிசனம் செய்துவிட்டு செல்வர்.
இந்நிலையில், திருச்சியை சேர்ந்த பக்தர் ஒருவரின் குடும்பத்தார் சார்பில், எட்டு கிலோ எடையில், ஆஞ்சநேயருக்கு புதிய வெள்ளிக்கவசம் வழங்கினர். 11 லட்சம் ரூபாய் மதிப்பில், தஞ்சாவூரில் செய்யப்பட்ட வெள்ளிக்கவசத்தை, நேற்று கோவில் நிர்வாகத்திடம் வழங்கினர். அதை தொடர்ந்து, நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, புதிய வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வியாசராஜர் ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.