/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பள்ளிப்பாளையத்தில் தம்பதியர் துாக்கிட்டு தற்கொலை
/
பள்ளிப்பாளையத்தில் தம்பதியர் துாக்கிட்டு தற்கொலை
ADDED : மே 16, 2025 01:53 AM
பள்ளிப்பாளையம், நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் ஆவாரங்காடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம், 49. இவரது மனைவி உஷாராணி, 43. இருவரும் விசைத்தறி தொழிலாளிகள். இவர்களுக்கு லாவண்யா, 25, என்ற மகளும், பூபதி, 20, என்ற மகனும் உள்ளனர்.
லாவண்யா திருமணமாகி கோவையில் வசித்து வருகிறார். ஈரோட்டில் உள்ள துணிக்கடையில் பூபதி வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் சண்முகம், இவரது மனைவி உஷாராணி இருவரும், அருகில் உள்ள உறவினர்களிடம் இரவு, 11:00 மணி வரை பேசியுள்ளனர். பின்னர், துாங்குவதற்கு வீட்டுக்கு சென்றனர். நேற்று காலை வெகு நேரமாகியும் தாய், தந்தை இருவரும் அவர்களது அறையில் இருந்து வெளிவராததால், மகன் பூபதி உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது, அந்த அறையில் உள்ள ஜன்னலில் சண்முகம், உஷாராணி இருவரும் ஒரே சேலையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த பூபதி கூச்சலிடவே, அருகில் இருந்தவர்கள் வந்து இருவரையும் மீட்டனர். தற்கொலை குறித்து, பள்ளிப்பாளையம் போலீசுக்கு மதியம் தான் தகவல் கிடைத்தது.
சண்முகத்தின் மகள் லாவண்யா கொடுத்த புகார்படி, பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப்
பதிவு செய்தனர். கணவன், மனைவி தற்கொலைக்கு கடன் பிரச்னையா, குடும்ப பிரச்னையைா அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.