/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாக்கடை கால்வாயை சீரமைக்க வலியுறுத்தல்
/
சாக்கடை கால்வாயை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : மே 23, 2025 01:22 AM
நாமகிரிப்பேட்டை, மே 23
நாமகிரிப்பேட்டை அடுத்த, வெள்ளக்கல்பட்டி
யில் உள்ள சாக்கடை கால்வாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வெள்ளக்கல்பட்டியில், 2,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். நாமகிரிப்பேட்டையில் இருந்து, ஆர்.புதுப்பட்டி செல்லும் சாலையின் இருபக்கமும் வெள்ளக்கல்பட்டி கிராமம் அமைந்துள்ளது. வெள்ளக்கல்பட்டி பஸ் நிறுத்தத்தை தாண்டியதும், சாலை மிகவும் குறுகலாகவும் வளைவாகவும் உள்ளது.
இந்த சாலை ஓரத்தில் உள்ள சாக்கடை கால்வாய், 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது சாக்கடை கால்வாய் சேதமடைந்துள்ளது. கழிவு
நீர் அதிகமாக வரும்போது சாலையிலேயே தண்ணீர் செல்கிறது. அதுமட்டுமின்றி சாக்கடை உடைந்துள்ளதால், லாரிகள் வரும்போது, பக்கத்தில் டூவீலர்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சாக்கடை கால்வாயை புதியதாக கட்டி சீரமைப்பதுடன் கான்கிரீட் அல்லது பலகை கற்களால் கால்வாய் மேல் மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.