/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல்லில் சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
/
நாமக்கல்லில் சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 13, 2025 01:35 AM
நாமக்கல், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலையோர சிறு வியாபாரிகள் சங்கத்தினர், நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாமக்கல் பூங்கா சாலையில், தமிழக அமைப்புசாரா சாலையோர சிறு வியாபாரிகள் முன்னேற்ற தொழிற்சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கவுரவ தலைவர் ராஜசேகரன் தலைமை வகித்தார். மாநில தலைவர் மாரியப்பன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து
பேசினார். நாமக்கல் மாநகராட்சி பகுதியில், சாலையோர வியாபாரிகளுக்கு தனி இடம் ஒதுக்க வேண்டும். கடன் வாங்கி தொழில் செய்யும் வியாபாரிகள், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். 340 சாலை சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். ஏற்கனவே வியாபாரம் செய்த இடத்தில், மீண்டும் விபாயாரம் செய்ய உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில், மாநில பொருளாளர் நாகேந்திரன், மாவட்ட செயலாளர் முருகன், மாநகர மகளிர் அணி செயலாளர் செல்வகுமாரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.