/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பொதுபாதை ஆக்கிரமிப்பு கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
பொதுபாதை ஆக்கிரமிப்பு கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 02, 2025 02:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல், தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினர் பழனிவேலு தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், 'சேந்தமங்கலம் தாலுகா, வெட்டுக்காட்டில், பொது பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அகற்ற வேண்டும்' என, கோஷம் எழுப்பினர். சங்க நிர்வாகிகள் மணிகண்டன், சிவக்குமார், பாபு உள்பட பலர் பங்கேற்றனர்.

