/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பிப்., 2ல் மருதகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: கலெக்டர் ஆய்வு
/
பிப்., 2ல் மருதகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: கலெக்டர் ஆய்வு
பிப்., 2ல் மருதகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: கலெக்டர் ஆய்வு
பிப்., 2ல் மருதகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: கலெக்டர் ஆய்வு
ADDED : ஜன 29, 2025 01:22 AM
நாமக்கல், :வரும் பிப்., 2ல் நடக்க உள்ள பெரியூர் மருதகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா முன்னேற்பாடு பணிகளை, நாமக்கல் கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட தும்மங்குறிச்சி பெரியூரில், பிரசித்திபெற்ற மருதகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், புதிதாக, 5 நிலை ராஜகோபுரம் கட்டப்பட்டு, கோவில் திருப்பணிகள் மிகுந்த பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்டன. திருப்பணிகள் முடிவுற்றதை யடுத்து, வரும் பிப்., 2ல், காலை, 9:45 மணிக்கு, கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடக்கிறது. உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் பல்வேறு
முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.விழாவை முன்னிட்டு, கோவில் வளாகத்தை நாமக்கல் கலெக்டர் உமா, போலீஸ் எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் ஆகியோர் பார்வையிட்டு, முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். ஏ.எஸ்.பி., ஆகாஷ் ஜோஷி, மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி, ஆர்.டி.ஓ., பார்த்திபன், ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் சுவாமிநாதன், மின்சாரம், உணவு பாதுகாப்பு, தீயணைப்பு மற்றும் மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை
அதிகாரிகள் பங்கேற்றனர்.