/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முருங்கை விலை சரிவுகிலோ ரூ.20க்கு விற்பனை
/
முருங்கை விலை சரிவுகிலோ ரூ.20க்கு விற்பனை
ADDED : மார் 30, 2025 01:26 AM
முருங்கை விலை சரிவுகிலோ ரூ.20க்கு விற்பனை
ராசிபுரம்:ராசிபுரம் உழவர் சந்தைக்கு, நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மங்களபுரம், திம்மநாயக்கன்பட்டி, ராசிபுரம், வெண்ணந்துார் ஒன்றிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
நேற்றைய உழவர் சந்தையில், தக்காளி கிலோ, 10 ரூபாய், கத்தரி, 38, வெண்டை, 38, புடலை, 30, பீர்க்கன், 35, பாகல், 38, சுரைக்காய், 15, பச்சை மிளகாய், 34, முருங்கை, 20, சின்ன வெங்காயம், 32, பெரிய வெங்காயம், 35, முட்டைகோஸ், 16, கேரட், 60, பீன்ஸ், 60, பீட்ரூட், 35, வாழைப்பழம், 40, கொய்யா, 50, பப்பாளி, 30, தர்பூசணி, 20, எலுமிச்சை, 60, ரூபாய்க்கு விற்பனையாகின.
நேற்று ஒரே நாளில், 27,815 கிலோ காய்கறி, 8,450 கிலோ பழங்கள், 495 கிலோ பூக்கள் என மொத்தம், 36,760 கிலோ காய்கறி, பழங்கள் விற்பனையாகின.
இதன் மொத்த மதிப்பு, 12.7 லட்சம் ரூபாயாகும். கடந்த மாதம் வரை, முருங்கைக்காய், 20 முதல், 30 கிலோ வரை வரத்தானது. அப்போது முருங்கை கிலோ, 100 முதல், 160 ரூபாய் வரை விற்றது. ஆனால், தற்போது, 260 கிலோ முருங்கைக்காய் வரத்தானது. இதனால் முருங்கை விலை கிலோ, 20 ரூபாயாக குறைந்தது.