/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நெகிழி இல்லா பசுமை திருவிழா 2,000 விவசாயிகள் பங்கேற்பு
/
நெகிழி இல்லா பசுமை திருவிழா 2,000 விவசாயிகள் பங்கேற்பு
நெகிழி இல்லா பசுமை திருவிழா 2,000 விவசாயிகள் பங்கேற்பு
நெகிழி இல்லா பசுமை திருவிழா 2,000 விவசாயிகள் பங்கேற்பு
ADDED : செப் 02, 2024 03:05 AM
நாமக்கல்: நாமக்கல் அடுத்த வேட்டாம்பாடி பி.ஜி.பி., வேளாண் கல்லுா-ரியில், கொல்லிமலை பல்லுயிர் பாதுகாப்பு அறக்கட்டளை, வானகம் (நம்மாழ்வார் உயிர்ச்சூழல் நடுவம்), நாமக்கல் தேசிய பசுமைப்படை சார்பில், 'நெகிழி இல்லா பசுமை திருவிழா--2024' நேற்று நடந்தது.
பி.ஜி.பி., கல்வி நிறுவனங்களின் தலைவர் பழனி ஜி பெரிய-சாமி தலைமை வகித்தார். கொல்லிமலை பல்லுயிர் பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் நித்யா வரவேற்றார். எம்.பி.,யும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி
தலைவருமான ராஜேஸ்குமார், எம்.பி., மாதேஸ்வரன் ஆகியோர் துவக்கி வைத்-தனர்.
பல்வேறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், நர்சரி பண்-ணைகள், பாரம்பரிய விதைகள், சிறுதானியங்கள், உயிர் உரம், ஒருங்கிணைந்த பண்ணையம், பாரம்பரிய உணவுகள், இயற்கை அங்காடி, மூலிகை குடிநீர், வாசனை
பொருட்கள், ஆர்கானிக் உணவுகள், குதிரைகள், நாட்டு மாடுகள், ஆயுர்வேத மூலிகைகள், இயற்கை விவசாயிகளின் நேரடி விற்பனை, பல்வேறு வேளாண் இயந்திரங்கள் மற்றும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்-தன.நுாற்றுக்கு மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிந்-தன. மாவட்டம் முழுவதும் இருந்து, 2,000க்கும் மேற்பட்ட விவ-சாயிகள் பங்கேற்று பயன்பெற்றனர்.