தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ நாமக்கல், திருச்செங்கோட்டில்21ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல், திருச்செங்கோட்டில்21ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல், திருச்செங்கோட்டில்21ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்


ADDED : பிப் 20, 2025 01:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2025 01:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல், திருச்செங்கோட்டில்21ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல்:'நாமக்கல், திருச்செங்கோட்டில், வரும், 21ல் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது' என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாமக்கல் பி.டி.ஓ., அலுவலகத்திலும், திருச்செங்கோடு பி.டி.ஓ., அலுவலகத்திலும், வரும், 21 காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. ஆர்.டி.ஓ.,க்கள் தலைமை வகிக்கின்றனர். அதில், விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று, தங்களது பயிர் சாகுபடிக்கு தேவையான நவீன தொழில் நுட்பங்கள், வேளாண் இடுபொருள் இருப்பு விபரங்கள், வேளாண் உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானிய திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம். மேலும், தங்களது கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us