/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதிரூ.30 கோடி வழங்க கோரிக்கை
/
எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதிரூ.30 கோடி வழங்க கோரிக்கை
எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதிரூ.30 கோடி வழங்க கோரிக்கை
எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதிரூ.30 கோடி வழங்க கோரிக்கை
ADDED : ஏப் 15, 2025 01:59 AM
எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதிரூ.30 கோடி வழங்க கோரிக்கை
நாமக்கல்:'மத்திய அரசு, எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியை, ஆண்டுக்கு, 30 கோடி ரூபாயாக வழங்க வேண்டும்' என, கொ.ம.தே.க., செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் தெற்கு மாவட்ட கொ.ம.தே.க., செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் எம்.பி., தலைமை வகித்தார். மாநில ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் துரை, மணி, ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், வரும் ஏப்., 17ல், தீரன் சின்னமலை பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னையில் நடக்கும் நிகழ்ச்சிகளில், நாமக்கல்லில் இருந்து கட்சியினர் திரளானோர் கலந்துகொள்ள வேண்டும். பொதுச்செயலாளர் ஈஸ்ரவன் வழிகாட்டுதல்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, ஆறு சட்டசபை தொகுதிகளிலும், தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை வெற்றியடைய செய்ய வேண்டும்.
மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் தங்களது பகுதியில் உள்ள மக்களின் அடிப்படை பிரச்னைகளை உடனுக்குடன் எம்.பி., மாதேஸ்வரன் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும். மத்திய அரசு, எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியை, ஐந்து கோடியில் இருந்து, 30 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.