/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வுபயிற்சி: 30 பேர் பங்கேற்பு
/
ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வுபயிற்சி: 30 பேர் பங்கேற்பு
ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வுபயிற்சி: 30 பேர் பங்கேற்பு
ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வுபயிற்சி: 30 பேர் பங்கேற்பு
ADDED : ஏப் 10, 2025 01:40 AM
ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வுபயிற்சி: 30 பேர் பங்கேற்பு
நாமக்கல்:'ஜே.இ.இ., அட்வான்ஸ்டு' தேர்விற்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு, மாநில அளவில் ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஹிந்துஸ்தானி கல்லுாரியில் பயிற்சி அளிக்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், 30 மாணவர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து, பஸ்சில் ஈரோடு பயிற்சி மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வின் முக்கியத்தும் குறத்து விளக்கி, மாணவர்களை வாழ்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சிவா, உதவி திட்ட அலுவலர் குமார், அரசு மாதிரி பள்ளி தலைமையாசிரியர் சுப்ரமணியன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நந்தினிதேவி, ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.