/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கடத்தல் ரேஷன் அரிசி3,360 கிலோ பறிமுதல்
/
கடத்தல் ரேஷன் அரிசி3,360 கிலோ பறிமுதல்
ADDED : ஜன 22, 2025 01:23 AM
கடத்தல் ரேஷன் அரிசி3,360 கிலோ பறிமுதல்
ப.வேலுார்,:நாமக்கல் மாவட்டத்தில், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் எஸ்.ஐ., ஆறுமுக நயினார் தலைமையிலான போலீசார், நாமக்கல் மாவட்ட வழங்கல் அலுவலருடன் இணைந்து, பரமத்தி அருகே, ஓவியம்பாளையம் சாலையில், நேற்று மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற வேனை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். ஆனால், போலீசாரை கண்டதும் டிரைவர் தப்பி ஓட முயற்சி செய்தார். அவரை மடக்கி பிடித்து விசாரித்தபோது, அவர் பரமத்தி அருகே, ஒழுகூர்பட்டியை சேர்ந்த தியாகராஜன் மகன் மகாலிங்கம், 29, என்பது தெரிந்தது. டெம்போ வேனில் சாக்கு மூட்டைகளில், 3,680 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் மகாலிங்கத்தை கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய வேனை பறிமுதல் செய்தனர்.