/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மாவட்டத்தில் 3,404 அலுவலருக்கு பணி
/
பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மாவட்டத்தில் 3,404 அலுவலருக்கு பணி
பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மாவட்டத்தில் 3,404 அலுவலருக்கு பணி
பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மாவட்டத்தில் 3,404 அலுவலருக்கு பணி
ADDED : பிப் 25, 2025 04:54 AM
நாமக்கல்: 'பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு பணியில், மாவட்டம் முழுவதும், 3,404 அலுவலர்கள் ஈடுபடுத்-தப்படுகின்றனர்' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்-துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு, வரும் மார்ச், 3ல் தொடங்கி, ஏப்., 15 வரை நடக்கிறது. பிளஸ் 2 தேர்வை, 86 மையங்களில், 9,157 மாண-வர்கள், 9,304 மாணவியர் என, மொத்தம், 18,461 பேர் எழுதுகின்-றனர். இத்தேர்வு எழுதவுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள், 132 பேரில், 115 பேருக்கு, சொல்வதை எழுதுபவர் நியமனம் செய்யப்-பட்டுள்ளது. பிளஸ் 1 பொதுத்தேர்வு, 86 மையங்களில் நடக்கி-றது.அதில், 9,372 மாணவர்கள், 9,594 மாணவியர் என மொத்தம், 18,966 பேர் பங்கேற்கின்றனர். அதில், மாற்றுத்திறனாளி மாண-வர்கள், 223 பேரில், 168 பேருக்கு, சொல்வதை எழுதுபவர் நிய-மனம் செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுக்கு, 86 முதன்மை கண்கா-ணிப்பாளர்கள், 86 துறை அலுவலர்கள், 4 கூடுதல் துறை அலுவ-லர்கள், 200 பறக்கும் படை உறுப்பினர்கள், வழித்தட அலுவ-லர்கள், 24, வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், மூன்று மற்றும் அறை கண்காணிப்பாளர்கள், 1,260 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, 92 மையங்களில், 10,005 மாண-வர்கள், 9,033 மாணவியர் என, மொத்தம், 19,038 பேர் எழுதுகின்-றனர். அதில், மாற்றுத்திறனாளி மாணவர்கள், 352 பேரில், 350 பேருக்கு, சொல்வதை எழுதுபவர் நியமனம் செய்யப்பட்டுள்ளது.மேலும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, 92 முதன்மை கண்-காணிப்பாளர்கள், 92 துறை அலுவலர்கள், இரண்டு கூடுதல் துறை அலுவலர்கள், 240 பறக்கும் படை உறுப்பினர்கள், வழித்-தட அலுவலர்கள், 24, வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், மூன்று மற்றும் அறை கண்காணிப்பாளர்கள், 1,288 பேர் நியமிக்கப்பட்-டுள்ளனர்.தேர்வு மையங்களை பார்வையிட கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், முதன்மைக்கல்வி அலுவலர், இடைநிலை, தனியார் பள்ளிகள், தொடக்கக்கல்வி மாவட்டக்-கல்வி அலுவலர்கள், அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் தலை-மையிலும் குழு அமைத்து தேர்வு மையங்களை பார்வையிட உள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.