/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரேக்ளா போட்டியில் 40 குதிரைகளுக்கு பரிசு
/
ரேக்ளா போட்டியில் 40 குதிரைகளுக்கு பரிசு
ADDED : ஜன 15, 2025 12:25 AM
ரேக்ளா போட்டியில் 40 குதிரைகளுக்கு பரிசு
நாமகிரிப்பேட்டை, :ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை பகுதியில், 18 ஆண்டு களுக்கு பின், 2-வது முறையாக குதிரை ரேக்ளா போட்டி, நேற்று நடந்தது. 150-க்கும் மேற்பட்ட குதிரைகள் கலந்து கொண்டன. சிறிய குதிரை, பெரிய குதிரை, புதிய குதிரை உள்ளிட்ட, 5 பிரிவுகளின் கீழ், 8 மைல், 10 மைல், 12 மைல் துாரம் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது.
நாமகிரிப்பேட்டை பஸ் ஸ்டாண்டில் இருந்து, எம்.பி., ராஜேஸ்குமார் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ராமசுவாமி, டவுன் பஞ்., தலைவர் சேரன், துணைத்தலைவர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குதிரை பந்தயத்தில் குதிரைகள் சீறிப்பாய்ந்து அதிவேகமாக சென்றதை கண்ட பொதுமக்கள், சாலையின் இருபுறமும் நின்று உற்சாகமாக கைத்தட்டி வரவேற்றனர். ராசிபுரம் டி.எஸ்.பி., விஜயகுமார் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பெரிய குதிரை, 10 மைல் போட்டியில், பவானி ஆனந்த் முதல் பரிசு; கோவை கோகுல் இரண்டாம் பரிசு; கோவை நித்ரன் மூன்றாம் பரிசு; கோவை நவீன் நான்காம் பரிசு பெற்றனர். அதேபோல், சிறிய குதிரை, 8 மைல் போட்டியில், திருச்சி உறையூர் விஜயா முதல் பரிசு; கரூர் பொன்னுசாமி இரண்டாம் பரிசு; கோவை ஆறுமுகம் மூன்றாம் பரிசு; நாமகிரிப்பேட்டை செட்டி நான்காம் பரிசு பெற்றனர். சிறிய குதிரை, 6 மைல் போட்டியில் பவானி வேலு, நாம
கிரிப்பேட்டை யுவராஜ், சேலம் அம்மாப்பேட்டை கொம்பன், ராசிபுரம் மொட்டை சிவா ஆகியோர், முதல் நான்கு பரிசு பெற்றனர்.
புதிய குதிரை போட்டி, 1ல் பவானி சிங்கார வேலவன், கோவை அங்காளபரமேஸ்வரி, கோவை குரூப், சென்னை தண்டையார் பேட்டை அருண் ஆகியோர், முதல் நான்கு பரிசை பெற்றனர். புதிய குதிரை போட்டி, 2ல் மோகனுார் கேசவன், பவானி எழில் பிரதர்ஸ், கோவை பழனி ஆண்டவர், ஆத்துார் ரமேஷ் ஆகியோர், முதல் நான்கு இடங்களை பிடித்தனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பை, ரொக்க பரிசு வழங்கப்பட்டது. மொத்தம், 40 குதிரைகளுக்கு, 4 லட்சம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.