/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எலக்ட்ரிக் கடையில்ரூ.65,000 திருட்டு
/
எலக்ட்ரிக் கடையில்ரூ.65,000 திருட்டு
ADDED : மார் 13, 2025 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எலக்ட்ரிக் கடையில்ரூ.65,000 திருட்டு
ப.வேலுார்:-கந்தம்பாளையம் அருகே, உலகப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம், 62; இவர், அதே பகுதியில் எலக்ட்ரிக் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை, கடையை திறக்க வந்தபோது, ஷட்டர் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். கடைக்குள் சென்று பார்த்தபோது, கல்லாப்பெட்டியை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த, 65,000 ரூபாயை, மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.