/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மக்களுடன் முதல்வர் முகாம்ரூ.74.12 லட்சத்தில் நலத்திட்டம்
/
மக்களுடன் முதல்வர் முகாம்ரூ.74.12 லட்சத்தில் நலத்திட்டம்
மக்களுடன் முதல்வர் முகாம்ரூ.74.12 லட்சத்தில் நலத்திட்டம்
மக்களுடன் முதல்வர் முகாம்ரூ.74.12 லட்சத்தில் நலத்திட்டம்
ADDED : மார் 06, 2025 01:40 AM
மக்களுடன் முதல்வர் முகாம்ரூ.74.12 லட்சத்தில் நலத்திட்டம்
சேந்தமங்கலம்:கொல்லிமலை யூனியன், தின்னனுார்நாடு, செலுார்நாடு, வலப்பூர்நாடு, அரியூர்நாடு பஞ்சாயத்தில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட மூன்றாம் கட்ட சிறப்பு முகாம் நடந்தது.
கலெக்டர் உமா தலைமை வகித்தார். ராஜேஸ்குமார் எம்.பி., முன்னிலை வகித்தார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், 100 பயனாளிகளுக்கு, 74.12 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
தொடர்ந்து, அமைச்சர் மதிவேந்தன் பேசுகையில், ''ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் அதிகளவில் வசிக்கும் கிராம ஊராட்சிகளில், 'மக்களுடன் முதல்வர்' முகாம், 3ம் கட்டமாக நடத்த உத்தரவிடப்பட்டு, நாமக்கல் மாவட்டத்தில், 60 முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது ஒருமாத காலத்தில் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நோக்கில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு முகாம் நடத்தப்பட்டு வருகிறது,'' என்றார்.
எம்.பி., ராஜேஸ்குமார் பேசுகையில், ''கொல்லிமலை யூனியனில், 472 பயனாளிகளுக்கு, 'கலைஞர் கனவு இல்ல' திட்டத்தில் வீடு கட்ட ஆணை வழங்கப்பட்டு பணிகள் நடக்கின்றன. இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான், வீடுகட்ட, 3.50 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படுகிறது,'' என்றார்.
எம்.எல்.ஏ., பொன்னுசாமி, வனஅலுவலர் கலாநிதி, திட்டஇயக்குனர் வடிவேல், செல்வராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.