/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரயிலில் சென்ற பெண்ணிடம்8 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு
/
ரயிலில் சென்ற பெண்ணிடம்8 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு
ரயிலில் சென்ற பெண்ணிடம்8 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு
ரயிலில் சென்ற பெண்ணிடம்8 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு
ADDED : மார் 03, 2025 01:33 AM
ரயிலில் சென்ற பெண்ணிடம்8 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு
பள்ளிப்பாளையம்:சென்னையில் இருந்து கோவை நோக்கி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று இரவு, 7:00 மணிக்கு புறப்பட்டது.
இந்த ரயில், பள்ளிப்பாளையம் அருகே, காவிரி ஆர்.எஸ்., பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ஜன்னல் ஓரத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணிடம், திடீரென வந்த மர்ம நபர், அவர் அணிந்திருந்த, 8 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு தப்பினார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், ஈரோடு ரயில்வே போலீசில் புகாரளித்தார்.
இதையடுத்த, ஈரோடு ரயில்வே போலீசார், காவிரி பகுதியில் விசாரணை நடத்தினர். பின், அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் வைக்கப்பட்டிருந்த, 'சிசிடிவி' கேமரா பதிவை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.