/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முதியவர் தீக்குளிக்க முயற்சி கலெக்டர் ஆபீசில் பரபரப்பு
/
முதியவர் தீக்குளிக்க முயற்சி கலெக்டர் ஆபீசில் பரபரப்பு
முதியவர் தீக்குளிக்க முயற்சி கலெக்டர் ஆபீசில் பரபரப்பு
முதியவர் தீக்குளிக்க முயற்சி கலெக்டர் ஆபீசில் பரபரப்பு
ADDED : ஆக 20, 2024 03:05 AM
நாமக்கல்: வீட்டை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம், நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் அடுத்த மின்னாம்பள்ளி, அண்ணாநகரை சேர்ந்தவர் செல்வராஜ், 67. இவரது சொந்த பட்டா நிலத்தில் உள்ள வீட்டை, கடந்த ஆக., 15ல், ஒரு சிலர் இடித்து விட்டதாக கூறி போலீஸ், வருவாய்த்துறையினரிடம் புகாரளித்துள்ளார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க, செல்வராஜ் தன் குடும்பத்தினருடன் வந்தார். அப்போது, கூட்டரங்கில், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அருகில் இருந்தவர்கள் அவரை தடுத்த நிறுத்தினர். இதையடுத்து, செல்வராஜ் குடும்பத்தினரிடம், கலெக்டர் உமா, 'வீட்டை இடித்து விட்டதாக கூறி மனு அளித்துள்ளீர்கள். அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதியளித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.