/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மது குடிக்க வைத்து மினி ஆட்டோ திருடிய 2 களவாணிகளுக்கு 'காப்பு'
/
மது குடிக்க வைத்து மினி ஆட்டோ திருடிய 2 களவாணிகளுக்கு 'காப்பு'
மது குடிக்க வைத்து மினி ஆட்டோ திருடிய 2 களவாணிகளுக்கு 'காப்பு'
மது குடிக்க வைத்து மினி ஆட்டோ திருடிய 2 களவாணிகளுக்கு 'காப்பு'
ADDED : செப் 04, 2024 09:30 AM
ப.வேலுார்: சேலம் மாவட்டம், மேச்சேரியை சேர்ந்த வீரபுத்-திரன் மகன் ராமச்சந்திரன், 30; பூச்செடி வியாபாரி. இவர் கடந்த, 25ல், நல்லுார் வாரச்சந்தைக்கு, மினி ஆட்டோவில் பூச்செடிகளை விற்பனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு வந்த மர்ம நபர்கள், ராமச்சந்திரனிடம் நண்பர்களாக பழகி, மது வாங்கி கொடுத்துள்ளனர். மதுவை குடித்த ராமச்-சந்திரன் அதே இடத்தில் மயங்கினார். இரவு, 9:00 மணிக்கு எழுந்து பார்த்தபோது, பூச்செடிகளுடன் மினி ஆட்டோ மாயமாகி இருந்தது. இதுகுறித்து ராமச்சந்திரன் கொடுத்த புகார்படி, நல்லுார் போலீசார் மினி ஆட்டோவையும், அதனை திரு-டிய மர்ம நபர்களை பிடிக்க, நாமக்கல் குற்றப்பி-ரிவு டி.எஸ்.பி., முருகேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர்.
நேற்று மோர்பாளையம் சந்தை அருகே, தனிப்-படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்-டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் மினி ஆட்டோவுக்கு ஆவணங்கள் எதுவும் இல்-லாமல் இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து, வண்டியில் இருந்த இருவரிடம் விசாரித்த போது, நல்லுார் வார சந்தையில் மினி ஆட்-டோவை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதை-யடுத்து, விழுப்புரத்தை சேர்ந்த சரவணன், 37, நல்லுார் சமத்துவபுரம் காலனியை சேர்ந்த வேங்கையன், 33, ஆகிய இருவரையும் கைது செய்து, மினி ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.