/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புதிய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

ADDED : ஜூலை 04, 2024 07:33 AM
நாமக்கல், : புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று, நாமக்கல் - மோகனுார் சாலையில் உள்ள, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், வக்கீல்கள் சங்கத்தினர் கண்-டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க செயலாளர் ராஜவேல் தலைமை வகித்தார். இதில், புதிய குற்றவியல் சட்டங்கள் சமஸ்-கிருத மொழியில் இடம் பெற்றுள்ளன.
இந்த சட்டங்களுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த போதும், கடந்தாண்டு லோக்சபாவில் மத்திய அரசு நிறைவேற்றி-யது. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷய அதிநயம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த, மூன்று சட்டங்களால் பல குளறுபடிகள் ஏற்படக்கூடும். அவற்றின் பெயர்களை எப்போதும் போல் உள்ள மொழியி-லேயே வெளியிட வேண்டும். சட்டத்தை முழுமையாக புரிந்து கொள்ளும்படி, அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.