/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பவானி - குமாரபாளையம் பாலம் அடைப்பு
/
பவானி - குமாரபாளையம் பாலம் அடைப்பு
ADDED : ஆக 01, 2024 02:01 AM
குமாரபாளையம்: காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கால், முன்னெச்சரிக்கை நடவ-டிக்கையாக பவானி - குமாரபாளையம் பாலம், தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டது.
மேட்டூர் அணை, தன் முழு கொள்ளளவான, 120 அடியை எட்டி-யதையடுத்து, கர்நாடகாவில் இருந்து வரும் தண்ணீர் முழுதும், காவிரி ஆற்றில் திறந்து விடப்படுவதால், ஒரு லட்சத்து, 50,000 கன அடி தண்ணீர் தற்போது காவிரி ஆற்றில் வந்து கொண்டுள்ளது.
இதன் காரணமாக, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகு-தியில் உள்ள காவிரி கரையோர பகுதிகளான கலைமகள் வீதி, இந்திரா நகர், அண்ணா நகர், மணிமேகலை தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும், 103 குடும்பத்தினர் மீட்கப்பட்டு, முகாம்-களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து, காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வரு-வதால், ஈரோடு மாவட்டம் பவானி, நாமக்கல் மாவட்டம் குமார-பாளையத்தை இணைக்கும் வகையில் பாலக்கரை பகுதியில் கட்-டப்பட்ட பழைய பாலம், பழுது காரணமாக மக்கள் செல்லாத-படி தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டது. இதனால், ஈரோடு மாவட்டம் பவானி - நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகு-திக்கு இருந்த, மூன்று பாதைகளில் ஒரு பாதை துண்டிக்கப்பட்-டதால், மக்கள் நீண்ட துாரம் சுற்றிச்செல்லும் நிலைக்கு தள்ளப்-பட்டுள்ளனர்.