/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.194 கோடியில் புறவழிச்சாலை, பஸ் ஸ்டாண்ட் தி.மு.க.,வின் வரலாற்று சாதனை: எம்.பி., ராஜேஸ்குமார்
/
ரூ.194 கோடியில் புறவழிச்சாலை, பஸ் ஸ்டாண்ட் தி.மு.க.,வின் வரலாற்று சாதனை: எம்.பி., ராஜேஸ்குமார்
ரூ.194 கோடியில் புறவழிச்சாலை, பஸ் ஸ்டாண்ட் தி.மு.க.,வின் வரலாற்று சாதனை: எம்.பி., ராஜேஸ்குமார்
ரூ.194 கோடியில் புறவழிச்சாலை, பஸ் ஸ்டாண்ட் தி.மு.க.,வின் வரலாற்று சாதனை: எம்.பி., ராஜேஸ்குமார்
ADDED : மார் 30, 2024 02:03 AM
நாமக்கல்:''நாமக்கல்லில்,
194 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும்
புறவழிச்சாலையும், பஸ் ஸ்டாண்டும், தி.மு.க., அரசின் வரலாற்று
சாதனை,'' -என, எம்.பி., ராஜேஸ்குமார் பேசினார்.
நாமக்கல் கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு நகர கழகம் சார்பில், 'இண்டியா' கூட்டணியின் வேட்பாளர் மாதேஸ்வரனை ஆதரித்து செயல்வீரர்கள்
கூட்டம் நடந்தது. மேற்கு நகர செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார்.
அமைச்சர் மதிவேந்தன், எம்.எல்.ஏ., ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை
வகித்தனர். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் பேசியதாவது:
நாமக்கல்
நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் மிகவும் சிரமப்பட்டு
வருகின்றனர். இதையறிந்த முதல்வர் ஸ்டாலின், நாமக்கல் நகருக்கு
முதலைப்பட்டியில், 24 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பஸ் ஸ்டாண்ட்,
நாமக்கல்லுக்கு, 194 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புறவழிச்சாலையும்
அமைக்க நிதி ஒதுக்கினார். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. நாமக்கல்
மாவட்டம் பிரிந்து, 30 ஆண்டுகளுக்கு பின், நாமக்கல் மாவட்டத்திற்கு என
தனியாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உருவாக்கப்பட்டுள்ளது.
தி.மு.க.,
ஆட்சியில், மகளிர் நலன் கருதி மகளிருக்கு கட்டணமில்லா பஸ் வசதி,
மகளிர் உரிமை தொகை, 1,000 ரூபாய், புதுமைப்பெண் திட்டம், மகளிர் சுயஉதவி
குழுக்களுக்கு கடன் தள்ளுபடி என பெண்கள் முன்னேற்றத்திற்கு
வழிவகுக்கும் திட்டங்கள், இந்தியாவிற்கு முன்னோடி திட்டமாக
உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன்,
மாநில இளைஞரணி துணை செயலாளர் ஆனந்தகுமார், நகர்மன்ற தலைவர் கலாநிதி,
தலைமை செயற்குழு உறுப்பினர் மருத்துவர் மாயவன், காங்., நிர்வாகி
செழியன், தெற்கு நகர கழக செயலாளர் ராணா ஆனந்த் உள்ளிட்டோர் வாழ்த்துரை
வழங்கினர். கிழக்கு நகர கழக செயலாளர் பூபதி நன்றி கூறினார். வார்டு
கழக செயலாளர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள்
கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட, 5,000க்கும் மேற்பட்டோர் கலந்து
கொண்டனர்.

