/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'சிசிடிவி' கேமரா செயல்படாததால் மர்ம நபர்களை பிடிப்பதில் சிக்கல்
/
'சிசிடிவி' கேமரா செயல்படாததால் மர்ம நபர்களை பிடிப்பதில் சிக்கல்
'சிசிடிவி' கேமரா செயல்படாததால் மர்ம நபர்களை பிடிப்பதில் சிக்கல்
'சிசிடிவி' கேமரா செயல்படாததால் மர்ம நபர்களை பிடிப்பதில் சிக்கல்
ADDED : ஆக 26, 2024 02:43 AM
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த புதுச்சத்திரம் யூனியன், மூணுசாவடியில் பழ-மைவாய்ந்த ஆவுடையப்பர் என்ற ஈஸ்வரன் கோவில் அமைந்-துள்ளது. இந்த கோவிலில் பிரதோஷம், விசேஷ தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து செல்கின்-றனர்.
கடந்த, 19ல் கோவிலின் வெளிப்புறம், உட்புறம் உள்ள விநா-யகர், முருகன் சிலை, கோவிலின் பின்புறம் உள்ள வரதராஜ பெருமாள், ஆஞ்சநேயர், கருடாழ்வார் உள்ளிட்ட சிலைகளை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். புதுச்சத்திரம் போலீசார் விசாரணையில், சிலையை உடைப்பதற்கு முன், 'சிசிடிவி' கேமரா ஆப் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
இதனால், சிலைகளை உடைத்த மர்ம நபர்களை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிலை உடைப்பு குறித்து, பா.ஜ., ஆன்-மிக ஆலய மேம்பாட்டு பிரிவினர், எஸ்.பி.,யிடம் புகாரளித்துள்-ளனர்.