/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'மாசு ஏற்படாத புதுப்பிக்கத்தக்க சூரிய சக்தியை பயன்படுத்த முன்வரணும்'
/
'மாசு ஏற்படாத புதுப்பிக்கத்தக்க சூரிய சக்தியை பயன்படுத்த முன்வரணும்'
'மாசு ஏற்படாத புதுப்பிக்கத்தக்க சூரிய சக்தியை பயன்படுத்த முன்வரணும்'
'மாசு ஏற்படாத புதுப்பிக்கத்தக்க சூரிய சக்தியை பயன்படுத்த முன்வரணும்'
ADDED : ஆக 31, 2024 12:46 AM
நாமக்கல்: ''சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில், புதுப்பிக்கத்தக்க எரி-சக்தியான சூரிய சக்தியை பயன்படுத்த அனைவரும் முன் வர வேண்டும்,'' என, எம்.பி., ராஜேஸ்குமார் பேசினார்.நாமக்கல் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக விளை-யாட்டு மைதானத்தில், வேளாண் பொறியியல் துறை சார்பில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் செயல்பாடு, பராம-ரிப்பு குறித்த மேளா, கால்நடை
பராமரிப்புத்துறை சார்பில், 1.26 கோடி ரூபாய் மதிப்பில் எட்டு நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சதி நடந்தது.
கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.பி., மாதேஸ்வரன், நாமக்கல் மாநகராட்சி மாமன்ற தலைவர் கலாநிதி, நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் மதுரா செந்தில் ஆகியோர் முன்-னிலை வகித்தனர்.எம்.பி.,யும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவ-ருமான ராஜேஸ்குமார் துவக்கி வைத்து பேசியதாவது: மத்திய, மாநில அரசுகள், விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. நவீன தொழில்நுட்பங்களையும்,
கருவிகளையும் பயன்படுத்தி விவசாயத்தை மேம்படுத்தி கொள்வது குறித்து விவசாயிகள் விழிப்புணர்வு பெற வேண்டும். வேளாண் கருவிகளுக்கு, 50 சத-வீதம் வரை மானியம், டிராக்டருக்கு, 4 லட்சம் ரூபாய் வரை மானியம்
வழங்கப்படுகிறது.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியான சூரிய சக்-தியை பயன்படுத்த, இரு ஆண்டுகளில், 50 சதவீதம் இலக்கை அடைய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நடமாடும் கால்-நடை மருத்துவ ஊர்தியை, 1962 என்ற
எண்ணிற்கு தொடர்பு கொண்டால், சிகிச்சை அளிக்கப்படும்.இவ்வாறு பேசினார்.தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 81 பேருக்கு, 27.85 லட்சம் ரூபாய் மதிப்பில் தங்க நாணயம், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மாடுலர்
ரீடிங்க் டிவைஸ், திறன்பேசி, தையல் இயந்திரம் உள்ளிட்ட அரசு நலத்-திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.நாமக்கல் மாநகராட்சி மாமன்ற துணைத்தலைவர் பூபதி, அட்மா குழுத்தலைவர் பழனிவேல், வேளாண் பொறியியல் துறை செயற்-பொறியாளர் முருகேசன், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் நாராயணன்,
அரசுத்துறை அலுவலர்கள், உள்-ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.