/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
செல்வம் தொழில்நுட்ப கல்லுாரியில் கணினி மென்பொருள் பயிற்சி நிறைவு விழா

ADDED : செப் 08, 2024 07:45 AM
நாமக்கல்: நாமக்கல் செல்வம் தொழில்நுட்ப கல்லுாரியில், இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு, ஐ.டி., சப்போர்ட் அண்ட் டெவ-லப்மென்ட் ட்ரைனிங் புரோகிராம் பயிற்சியளிக்கப்பட்டது.
இந்த பயிற்சி முடிந்ததையடுத்து, சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. செல்வம் கல்வி நிறுவனங்களின் தலைவர்
மற்றும் செல்வம் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் செல்வராஜ் தலைமை வகித்தார். செயலாளர் கவித்ரா
நந்தினி, செயல் இயக்-குனர் கார்த்திக் ஆகியோர், மாணவர்களை வாழ்த்தி பேசினர். கல்-லுாரி முதல்வர் ஜெகன், மாணவர்களை
ஊக்குவித்து பேசினார். சிறப்பு விருந்தினராக, சென்னை மைண்ட் பிரஸ் முதன்மை செயல் அலுவலரும், ஊக்கமளிப்பு
பேச்சாளருமான கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டார். அவர், கல்லுாரி வாழ்க்-கையின்
முக்கியத்துவத்தையும், அத்துடன் புதிய திறன்களை கற்-றுக்கொள்வதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
மேலும், ''கற்-றலுக்கான ஆர்வத்தை உங்கள் வாழ்க்கை முழுதும் தக்க வைத்-துக்கொள்ளுங்கள் . புதிய விஷயங்களை
கற்றுக்கொள்வது மட்-டுமே மற்றவர்களிடமிருந்து தனித்துவப்படுத்தும்,'' என்றார்.