/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாணவிக்கு தவறான சிகிச்சை அளித்த கம்பவுன்டர் கைது
/
மாணவிக்கு தவறான சிகிச்சை அளித்த கம்பவுன்டர் கைது
ADDED : ஆக 25, 2024 06:58 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அரசு பெண்கள் பள்ளியில், 700க்கும் மேற்-பட்ட மாணவியர் படித்து வருகின்றனர். இதில், 50க்கும் மேற்-பட்டோர், பள்ளி வளாகத்தில் உள்ள மலைவாழ் மக்கள் நலத்-துறை விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். கடந்த ஒரு வார-மாக விடுதியில் உள்ள மாணவியர், காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளனர்.
இதில், கொல்லிமலை பெரக்கரை நாடு அடுத்த வரகாட்டை சேர்ந்த, 13 வயது மாணவி, விடுதியில் தங்கி நாமகிரிப்பேட்டை அரசு பள்ளியில், 8ம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு, நேற்று முன்தினம் காய்ச்சல் அதிகமானது. இதையடுத்து, நாமகி-ரிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கம்பவுன்ட-ராக பணிபுரிந்து வரும் சீனி, 50, என்பவரை சிகிச்சை அளிக்க அழைத்துள்ளனர்.
மாணவியை பரிசோதனை செய்த சீனி, ஊசிபோட்டு மாத்திரை வழங்கியுள்ளார். ஆனால், சிறிது நேரத்தில் மாணவி மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த விடுதி வார்டன் பிரியதர்-ஷினி, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் மாணவியை சிகிச்சைக்கு சேர்த்தார். சிகிச்சைக்கு பின் மாணவி வீட்டிற்கு சென்றார். இதுகுறித்து, மாணவியின் தந்தை கொடுத்த புகார்படி, கம்பவுன்டர் சீனியை, நாமகிரிப்பேட்டை போலீசார் கைது செய்-தனர்.

