/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கரைப்பு
/
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கரைப்பு
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கரைப்பு
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கரைப்பு
ADDED : செப் 10, 2024 06:04 AM
ராசிபுரம்: ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மோகனுார் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.விநாயகர் சதுர்த்தியின் மூன்றாம் நாளான நேற்று, ராசிபுரம் பகு-திக்குட்பட்ட சிலைகள், மோகனுாரில் கரைக்க ஏற்பாடு செய்யப்-பட்டிருந்தது. அதன்படி, நேற்று காலை, 9:00 மணியில் இருந்து சிலைகளை கரைக்க எடுத்து
செல்லதொடங்கினர். லாரி, மினி ஆட்டோ உள்ளிட்டவைகளில் பக்தர்கள் சிலைகளை வைத்து எடுத்துச்சென்றனர்.ராசிபுரம் டி.எஸ்.பி., விஜயகுமார் தலைமையில், 200க்கும் மேற்-பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வெண்-ணந்துார், ராசிபுரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த, 93 சிலைகள் ராசிபுரம் வழியாக
கொண்டுசெல்லப்பட்டு, கோனேரிப்பட்டியில் இருந்து சேந்தமங்கலம் வழியாக செல்லும் தொழிற்வட புறவழிச்-சாலை வழியாக மோகனுாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதேபோல், நாமகிரிப்பேட்டை, ஆயில்பட்டி உள்ளிட்ட
பகுதி-களில் வைக்கப்பட்ட, 96க்கும் அதிகமான சிலைகள் நாமகிரிப்-பேட்டையில் இருந்து பேளுக்குறிச்சி வழியாக சேந்தமங்கலம் புறவழிச்சாலை வழியாக மோகனுாருக்கு அனுப்பி வைக்கப்பட்-டது. புறவழிச்சாலையில் செல்வதற்கு முன், சிலைகளை எடுத்துச்-செல்லும் வாகனங்கள், டிரைவர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்-களை சரிபார்த்து, சிலைகளை எடுத்துச்செல்லும் நபர்களின் விப-ரங்களை குறித்துக்கொண்டு போலீசார்
அனுப்பி வைத்தனர். 10 வண்டிகளுக்கு, 2 போலீசார் காவலுக்கு சென்றனர். 5 கி.மீ., துாரத்-திற்கு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

