/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வரகூர் அரசு பள்ளியில் மாணவர் பலி மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை
/
வரகூர் அரசு பள்ளியில் மாணவர் பலி மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை
வரகூர் அரசு பள்ளியில் மாணவர் பலி மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை
வரகூர் அரசு பள்ளியில் மாணவர் பலி மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை
ADDED : ஆக 25, 2024 06:58 AM
எருமப்பட்டி: எருமப்பட்டி அருகே நவலடிப்பட்டியை சேர்ந்த ரமேஷ் மகன் ஆகாஷ், 16; வரகூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் ௧ படித்தார். இவருக்கும் மற்றொரு மாணவனுக்கும் வகுப்பறையில், நேற்று முன்தினம் மாலை தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் தாக்கி கொண்டதில், ஆகாஷ் மயங்கி விழுந்தார். பள்ளி ஆசிரியர்கள் ஆகாஷை மீட்டு, பவித்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
அங்கிருந்து எருமப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஆகாஷ் இறந்து விட்டது தெரிந்தது. இதையடுத்து நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு, உடல் அனுப்பி வைக்கப்பட்டது. தனது செருப்பை ஒழித்து வைத்தது தொடர்பாக, மாணவனை தட்டிக்கேட்டு ஆகாஷ் சண்டை போட்டுள்ளார். ஆகாஷை தாக்கிய மாணவனை போலீசார் கைது செய்து, சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், நேற்று வரகூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்ற மாவட்ட கல்வி அலுவலர் விஜயன், மாணவன் உயிரிழந்த போது பணியில் இருந்த வகுப்பு ஆசிரியர், தலைமை ஆசிரியர், மாணவர்களிடம் விசாரணை நடத்தினார்.