/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டாஸ்மாக் கடையால் தொந்தரவு வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை
/
டாஸ்மாக் கடையால் தொந்தரவு வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை
டாஸ்மாக் கடையால் தொந்தரவு வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை
டாஸ்மாக் கடையால் தொந்தரவு வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை
ADDED : ஜூலை 04, 2024 07:36 AM
எருமப்பட்டி : எருமப்பட்டி யூனியன், பொட்டிரெட்டிபட்டி - நாமக்கல் ரோட்டில் வாரச்சந்தை உள்ளது. இந்த சந்தையின் பின்புறம், டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு வரும், 'குடி'மகன்கள் மது போதையில் சாலையை கடக்கும் போது, விபத்து நடப்பது வாடிக்கையாக உள்ளது. மேலும், இந்த இடத்தில், 5க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளில், வெளி மாவட்ட
கூலித்தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கியுள்ளனர். இரவில், இப்பகுதியில் மது அருந்தும், 'குடி'மகன்கள், போதையில் ஆபாச வார்த்தைகளில் பேசி சத்தமிடுகின்றனர். இதனால், இங்குள்ள பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படுகி-றது.
எனவே, மக்கள் நலன் கருதி, இங்குள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.