/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'போதைப் பொருட்கள் இல்லாத தமிழகம்' விழிப்புணர்வு பேரணி; உறுதிமொழி ஏற்பு
/
'போதைப் பொருட்கள் இல்லாத தமிழகம்' விழிப்புணர்வு பேரணி; உறுதிமொழி ஏற்பு
'போதைப் பொருட்கள் இல்லாத தமிழகம்' விழிப்புணர்வு பேரணி; உறுதிமொழி ஏற்பு
'போதைப் பொருட்கள் இல்லாத தமிழகம்' விழிப்புணர்வு பேரணி; உறுதிமொழி ஏற்பு
ADDED : ஆக 13, 2024 06:15 AM
திருச்செங்கோடு: 'பள்ளி, கல்லுாரி வளாகங்களிலிருந்து, 100 மீட்டர் இடைவெ-ளியில் போதைப் பொருட்கள் விற்பனை முற்றிலும் தடைசெய்-யப்பட்டுள்ளது' என, நாமக்கல் கலெக்டர் உமா பேசினார்.
முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற, காவல்துறை சார்பில் நடந்த, 'போதைப் பொருட்கள் இல்லாத தமிழகம்' நிகழ்ச்சியில், காணொலி காட்சி மூலம், திருச்செங்கோடு, கே.எஸ்.ஆர்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர், போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். கலெக்டர் உமா, எஸ்.பி., ராஜேஷ்கண்ணன், அரசுத்துறை அலுவ-லர்கள் கலந்துகொண்டனர். அப்போது, கலெக்டர் உமா
பேசியதாவது:
இன்றைய இணையதள உலகில், அனைவரும் மொபைல் போன் பயன்படுத்தி வருகிறோம். மாணவர்களாகிய நீங்கள் இணையத-ளத்தில் உள்ள நல்ல கருத்துகளை மட்டும் எடுத்துக்கொண்டு, தங்கள் கல்வி வளர்ச்சிக்கு பயன்படுத்தி, வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும். பெற்றோர், ஆசிரியர்களை நம்பி தான், தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் விட்டு செல்கின்றனர்.
தினமும் குழந்தைகளின் மன நிலை, உடல்நிலை குறித்து கண்கா-ணிக்க வேண்டிய மிக முக்கிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு. ஆசிரியர்கள், பள்ளியில் ஒவ்வொரு குழந்தைகளையும் தாய் அன்போடு கண்காணித்து, அவர்களை சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைய செய்ய வேண்டும். பள்ளி, கல்லுாரி வளாகங்களிலிருந்து, 100 மீட்டர் இடைவெளியில் போதைப் பொருட்கள் விற்பனை முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. மாணவர்கள், பல்வேறு துறைகளில் தங்களை மேம்படுத்தி கொண்டு, சரியான பாதையை தேர்வு செய்து வெற்றி இலக்கை அடைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதேபோல், நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி கலையரங்கில் நடந்த, 'போதைப் பொருட்கள் இல்லாத தமிழகம்' விழிப்பு-ணர்வு நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார், டி.ஆர்.ஓ., சுமன் மற்றும் 1,500-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவ, மாண-வியருடன், போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்-கொண்டனர்.

