/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விவசாயிகளுக்கு தனிக்குறியீடு எண் பொது சேவை மையத்தில் பதியலாம்
/
விவசாயிகளுக்கு தனிக்குறியீடு எண் பொது சேவை மையத்தில் பதியலாம்
விவசாயிகளுக்கு தனிக்குறியீடு எண் பொது சேவை மையத்தில் பதியலாம்
விவசாயிகளுக்கு தனிக்குறியீடு எண் பொது சேவை மையத்தில் பதியலாம்
ADDED : மார் 04, 2025 06:13 AM
ராசிபுரம்: விவசாயிகளுக்கு தனிக்குறியீடு எண் வழங்குவதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. நில விபரங்களுடன், விவசாயி-களின் விபரம் மற்றும் நில உடமை வாரியான விபரங்கள் பதிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு விவசாயிகளுக்கும் தனிக்குறியீடு எண் வழங்கப்படுகிறது. விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகே, அவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு அடையாள எண் வழங்கப்படுகிறது. விவசாயிகளின் வயல்களுக்கே சென்று இந்த முகாம் நடந்து வந்தது.
ஆனாலும், எதிர்பார்த்த அளவிற்கு பதிவு செய்யவில்லை என்-பதால், தற்போது, பொது சேவை மையங்களிலும் தனிக்குறியீடுக்-கான பதிவு தொடங்கியுள்ளது. விவசாயிகள் நில ஆவணங்க-ளான பட்டா, சிட்டா, ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைந்த தொலைபேசி எண் ஆகியவற்றை பொது சேவை மையங்களுக்கு கொண்டு சென்றால், பதிவு செய்து கொள்ளலாம் என, வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.