ADDED : செப் 02, 2024 03:13 AM
ராசிபுரம்: பெண்களுக்கான இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு ஏற்-பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்று பயன்பெறலாம் என, இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்ட அலுவலர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:மத்திய அரசின் தேசிய வள அமைப்பான அகமதாபாத்தை சேர்ந்த, இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், ராசிபுரம் நகரில் பெண்களுக்கான இலவச திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில்
தொழில் முனைவோ-ராக விருப்பமுள்ள, 18 வயதிற்கு மேற்பட்ட, 45 வயதுக்குட்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொழில் முனைவோர் பயிற்சியுடன் கூடிய திறன் பயிற்சி அளிக்கிறது. இதில், சணல்
பொருட்களிலிருந்து தயாரிக்க கூடிய லேப்டாப் பேக் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிப்பது குறித்த தையல் பயிற்சி ஒரு மாத கால இலவச பயிற்சியாக, ராசிபுரத்தில் அளிக்கப்பட உள்ளது.இப்பயிற்சியில் பல்வேறு தொழில் வாய்ப்புகள், சந்தைப்படுத்-துதல், திட்ட அறிக்கை தயாரித்தல், மத்திய மாநில அரசுகளின் பல்வேறு மானிய திட்டங்கள் போன்றவைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி
முடித்தவர்களுக்கு மத்திய அரசின் அங்கீ-கரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் சேர விருப்ப-முள்ளவர்கள், 8825812528 மற்றும் 9443276921 என்ற எண்ணிற்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தங்கள் பெயரை முன்பதிவு செய்து
தேவை-யான விபரங்களை பெற்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.