/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பி.ஜி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
பி.ஜி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
பி.ஜி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
பி.ஜி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : ஆக 19, 2024 05:56 AM
நாமக்கல்: நாமக்கல், பரமத்தியில் அமைந்துள்ள, பி.ஜி.பி., கலை அறி-வியல் கல்லுாரியில், நேற்று காலை, 10:00 மணிக்கு பட்டளிப்பு விழா நடந்தது. தலைவர் பழனி ஜி.பெரியசாமி, துணைத்த-லைவர் விசாலாட்சி பெரியசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை, குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். தாளாளர் கணபதி அனைவரையும் வரவேற்றார். கல்-லுாரி முதல்வர் ராஜசேகர், விருது பெறுபவர்களின் விபர அறிக்-கையை சமர்ப்பித்தார்.
விழாவில், பி.ஜி.பி., கல்வி நிறுவனங்களின் செவிலியர் கல்-லுாரி, கல்வியியல் கல்லுாரி, உயர் தொழில்நுட்பவியல் கல்லுாரி, மருந்தக கல்லுாரி, இயன்முறை மருத்துவ கல்லுாரி முதல்வர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, 300க்கும் மேற்பட்ட இளநிலை, முது-நிலை மாணவர்களுக்கு பட்டம் வழங்கினர். தொடர்ந்து கல்லுாரி முதன்மையர் பெரியசாமி நன்றியுரை ஆற்றினார்.விழா ஏற்பாடுகளை, கல்லுாரியின் அனைத்து பேராசிரியர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர். கல்லுாரி ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, துறைத்தலை-வர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.