/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் பங்கேற்க அழைப்பு
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் பங்கேற்க அழைப்பு
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் பங்கேற்க அழைப்பு
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் பங்கேற்க அழைப்பு
ADDED : ஆக 10, 2024 06:50 AM
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப-தாவது:
தமிழக முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி, வரும், செப்., அக்., மாதங்களில் நடத்தப்பட உள்ளது. இதில், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொது-மக்கள், அரசு ஊழியர்கள் என, ஐந்து பிரிவுகளில், 27 விளை-யாட்டு போட்டிகள் நடக்க உள்ளன.
இப்போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், https://sdat.tn.gov.in என்ற இணை-யதளத்தில் முன்பதிவு செய்து, அதற்குரிய ஆவணங்களை சமர்ப்-பித்து பதிவேற்றம் செய்ய வேண்டும். இப்போட்டிகளில் வழங்-கப்படும் சான்றுகள் மூலம், உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சலுகைகளும் பெற இயலும். போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்ய கடைசி நாள் ஆக., 25. விபரங்களுக்கு, 7401703492 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 'ஆடு-களம்' தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்க-ளிலும், காலை, 10:00 முதல், மாலை, 5:00 மணி வரை, 9514000777 என்ற என்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.