/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கள்ளச்சாராய ஊறல் பதுக்கிய நபர் கைது
/
கள்ளச்சாராய ஊறல் பதுக்கிய நபர் கைது
ADDED : செப் 02, 2024 03:14 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் உற்பத்தி செய்பவர்களை கண்டறிந்து, அவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். அதன்படி, நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் கள்ளச்சாராய விற்பனை செய்வ-தாக, எஸ்.பி., ராஜேஷ்கண்ணனுக்கு தகவல் வந்தது.
அவரது உத்தரவுப்படி, கூடுதல் எஸ்.பி., தனராசு மேற்பார்-வையில், மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் தலைமையில், போலீசார் நேற்று கொல்லிமலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது,
செல்லிக்காடு காட்டில், 52 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கள்ளச்சாராய ஊறலை பதுக்கி வைத்-திருந்த குப்பன், 54, என்பவரை போலீசார் கைது செய்து, சேலம்
மத்திய சிறையில் அடைத்தனர்.