/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆதிதிராவிடர், வனத்துறை சார்பில் ரூ.12 கோடியில் திட்டப்பணிகள் துவக்கம்
/
ஆதிதிராவிடர், வனத்துறை சார்பில் ரூ.12 கோடியில் திட்டப்பணிகள் துவக்கம்
ஆதிதிராவிடர், வனத்துறை சார்பில் ரூ.12 கோடியில் திட்டப்பணிகள் துவக்கம்
ஆதிதிராவிடர், வனத்துறை சார்பில் ரூ.12 கோடியில் திட்டப்பணிகள் துவக்கம்
ADDED : ஆக 15, 2024 01:49 AM
ராசிபுரம், -
நாமக்கல் மாவட்டத்தில், ஆதிதிராவிடர், ஹிந்து சமய அறநிலையத்துறை, வனத்துறை சார்பில், 12 கோடி ரூபாய் மதிப்பில் முடிக்கப்பட்ட பல்வேறு திட்டப்பணிகளை, முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பிரன்சில் துவக்கி வைத்தார். ராசிபுரம் நகராட்சி, ஆதிதிராவிடர் நல மாணவியர் புதிய விடுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.பி.,யும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான ராஜேஸ்குமார் பங்கேற்றார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின்,
மாணவ, மாணவியரின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அரசு கல்லுாரி விடுதிகள், முன்பு அடுக்குமாடி குடியிருப்பு போல் இருக்கும். ஆனால் தற்போது, தனியார் கல்லுாரி விடுதிகளுக்கு நிகராக சிறந்த வடிவமைப்புடன் கட்டப்
பட்டுள்ளது.
கல்வி என்பது அனைவருக்கும் பொதுவானது. கல்விக்கு ஏழை, எளிய ஏற்றத்தாழ்வு என்பது கிடையாது. கல்வி ஒன்றே ஒருவரது தலைமுறையை மாற்றும் ஆற்றல் கொண்டது. கல்வி கற்பதால் மட்டுமே ஒரு மனிதன் முழுமை அடைகிறேன். எனவே, அனைவரும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து கல்வி கற்க வேண்டும். மாணவர்கள் அரசின் திட்டங்களை நன்கு பயன்படுத்தி, வாழ்வில் உயர்நிலை அடைந்து பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும், நம் மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்க
வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ராசிபுரம் நகர்மன்ற தலைவர் கவிதா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகன், அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.